ஐபிஎல் 2024 பிளே ஆப் சுற்றுக்கு போட்டி போடும் 4 அணிகள்.. யாருக்கு வாய்ப்பு

IPL 2024 ஆம் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் ரன் ரேட் 0.52 என்ற நிலையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் சிஎஸ்கே அணி தங்களுடைய பிளே ஆப் வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டிருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு எந்த அணி தகுதி பெறும் என்பதை தற்போது பார்க்கலாம். இனி சிஎஸ்கே அணிக்கு, ஆர்சிபிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி மட்டும்தான் எஞ்சி இருக்கிறது. அதில் சிஎஸ்கே அணி தோற்றால் 14 புள்ளிகள் உடன் சிஎஸ்கே இருக்கும். அதன் பிறகு கே கே ஆர், ராஜஸ்தான், சன்ரைசஸ் டெல்லி அல்லது லக்னோ ஆகிய ஆணிகள் சிஎஸ்கே வை விட அதிக புள்ளிகள் பெற வாய்ப்பு இருக்கிறது. இதனால் தற்போது நடைபெற்று வரும் ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்று லக்னோ அணிக்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்திலும் டெல்லி வென்றால் அவர்கள் 16 புள்ளிகளை பெற்று விடுவார்கள். நடக்கும் பட்சத்தில் சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார்கள். இதே போன்று லக்னோ அணி டெல்லி அணியையும், மும்பையையும் வீழ்த்திவிட்டால் அவர்கள் 16 புள்ளிக...