கேப்டன்சியில் மோசமாக சறுக்கும் ருதுராஜ்..

 


சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய 3 காரணம்.. ரசிகர்கள் அதிருப்தி
ஐபிஎல் தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு கேப்டன் ருதுராஜின் சில முடிவுகள் முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஒரு வழியாக டாஸ் வென்றார். ஆனால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஐட்டம்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் சதம் அடிக்க, 20 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
பந்து வீசியின் போது கேப்டன் ருதுராஜ் பகுதி நேர மிதவேகப்பந்துவீச்சாளர் டேரில் மிட்சலை நான்கு ஓவர்களுக்கு பயன்படுத்தினார். ஆனால் உலகத்தரம் வாய்ந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் மிட்சல் சான்ட்னர் இருவரையும் தலா இரண்டு ஓவர்களுக்கு மட்டுமே கொண்டு வந்தார்
மற்ற பந்துவீச்சாளர்கள் வீசி தரக்கூடிய ரன்களை இவர்கள் தந்தாலும் கூட, இவர்களால் விக்கெட் சான்ஸ் உருவாக்க முடியும். ஆனால் இதை பயன்படுத்திக் கொள்ள ருதுராஜ் முன்வரவில்லை. மேலும் இந்த தொடர்பு முழுக்கவே அவர் அதிகமாக வேகப்பந்துவீச்சாளர்களையே சார்ந்து இருக்கிறார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழல் பந்துவீச்சாளர்களின் எக்கனாமிதான் கம்மியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய இலக்கை நோக்கி விளையாட வந்த பொழுது, தற்பொழுது பார்மில் இல்லாத ரகானேவை இம்பேக்ட் பிளேயராக கொண்டு வந்தார். இன்றைய போட்டிக்கு வந்த ரச்சின் ரவீந்திராவும் பார்மில் இல்லாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட இரண்டு பேட்ஸ்மேன்களை பெரிய இலக்கை நோக்கி விளையாட, அதுவும் புதிதாக இந்த போட்டிக்கு மட்டும் இந்த ஜோடியை அனுப்புவது சரியான ஒன்றாகவே இல்லை.


ருதுராஜ் ஐநூறு ரன்களுக்கு மேல் அடித்து நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். அவர் பேட்டில் இருந்து ரன்கள் வந்திருந்தால் அது ரச்சின் ரவீந்திராவுக்கும் கொஞ்சம் அழுத்தத்தை கொடுத்து இருக்காது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் பவர் பிளேவில் ரன்கள் வராதது தான் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இப்படி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பகுதிகளும் கேப்டன் ருதுராஜ் முக்கியமான தவறுகளை செய்து போட்டியையும் தோற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

<script async="async" data-cfasync="false" src="//pl23287031.highcpmgate.com/ecb4044103c0e34137a5f2f1b6be8fcf/invoke.js"></script>
<div id="container-ecb4044103c0e34137a5f2f1b6be8fcf"></div>




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Ipl 2023 LSG vs RR

ஐபிஎல் 2023 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்