IPL 2024தோல்விக்கு காரணம் சொன்ன ருதுராஜ்!
அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கான காரணம் குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை விளாசியது. சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்சன் 103 ரன்களும் விளாசினர். இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதனால் சிஎஸ்கே அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ளது. இதனால் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் சிஎஸ்கே அணி அடுத்த 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலை உள்ளது.
இந்த பிட்சில் ரன்களை கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை. நாங்களும் விக்கெட் வீழ்த்த தவறிவிட்டோம். அவர்கள் இருவருமே நல்ல கிரிக்கெட் ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தார்கள். அடுத்த போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளோம். நிச்சயம் சிறந்த அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக எளிதாக போட்டியாக இருக்காது
கருத்துகள்
கருத்துரையிடுக